Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

January 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்மலை, தவலந்தனை மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி புதன்கிழமை (17) ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார்.

கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணும் வத்தளையைச் சேர்ந்த 39 வதுடைய பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு கடந்த 31ஆம் திகதி வந்துள்ளார்.

இந்த ஜோடி அவரிடம் வந்து “அம்மா எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? எனக் கேட்டு உடனடியாக பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும், குறித்த பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதுடன், பொருளாதார நிலையில் இருந்து மீள உதவுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

அப்பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு கையடக்கத்தொலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர்.

தைக்கப்பட்ட ஆடைகள் சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூறியுள்ளனர்.

குறித்த பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு வந்ததையடுத்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர்.

அவ்விருவரும் அவற்றை வாங்கி பருகியுள்ளனர். அதன்பின்னர் பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்தனர், அவர்கள் சுயநினைவு திரும்பியபோது, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன.

சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, மிகவும் நுட்பமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர் .

இதன்படி, சந்தேகநபர் பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து சில தினங்களுக்கு முன்னர், வெளிவந்துள்ளார்.

அதன் பின்னர், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், பல இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (18) ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

நாரமல்லவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | உப பொலிஸ் பரிசோதகர் கைது

Next Post

நாரமலவில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் | சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருப்பது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures