ஊரகப் பகுதிகளை விட சீஸ் பர்கர்களைச் சாப்பிட்டு வாழும் நகர்புற காக்கைகளுக்கு உடலில் கொழுப்புச் சத்து அதிகமிருப்பதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பீட்சா, பர்கர்கள் அதிகம் டெலிவரியாகும் நகரப்பகுதியையும், அவை குறைந்தளவு விற்கப்படும் ஊரகப் பகுதியையும் மாதிரி இடமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரகப் பகுதிகளை விட நகரப்பகுதிகளில் பழைய சீஸ் பர்கர்கள் குப்பையில் வீசப்படுவது அதிகம் எனவும், அவற்றை காக்கை போன்ற பறவைகள் எடுத்துச் சென்று ஓரிடத்தில் வைத்து சாப்பிடுவதும் வழக்கமான நடப்பதைக் கண்டறிந்தனர்.
அவற்றின் கூட்டுக்கே சென்று மயக்க மருந்து மூலம் பிடித்து ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் நகர்பகுதி காக்கைகள் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தது. அத்துடன் அவற்றின் ரத்த அழுத்த அளவும் 140-ஆக இருந்தது.
ஆனால் ஊரகப் பகுதிகளில் அத்தகைய உணவுப்பொருள் வீணாக்கல் குறைவு என்பதால் அங்குள்ள காக்கைகள் தாங்களே தங்களது உணவைத் தேடிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.