Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

May 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து  கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப்பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்க முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த கல்விளான் பகுதியைச்சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.

அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களுக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலந்தரு நீண்டகாலப் பயிர்களும், அந்தமக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. அனவே அந்தக்காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள்ள இடித்ழிப்புச் செய்யப்படவேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.

எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது.

அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்தோடு அந்த மக்களுக்ளுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் பழையவீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடுள்றது என்றார்.

Previous Post

சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

Next Post

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

Next Post
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures