தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் கதையின் நாயகனாக தடகள வீரராக நடித்திருக்கும் ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தில் கே ஜே ராஜேஷ் ,விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.
விளையாட்டு வீரரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் கே பிரசாந்த் – அஜித் பாஸ்கர்- அருண் முருகன் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் விளையாட்டுத்துறை மீதான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

