பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அந்நாட்டின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெற்றி சதுக்கத்தில் (Victory Square) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
வெற்றி சதுக்கத்தில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜித்த ஹேரத், அந்நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களை இதன்போது நினைவுகூர்ந்தார்.




