நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பின், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்க, ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மாரி படத்தின் பெரும் பகுதி பணிகள் நிறைவடைந்துவிட்டன.
படம் பற்றி ஜெய் கூறுகையில், ”எத்தனையோ படத்தில் நடித்துவிட்டேன். ஒவ்வொரு இயக்குனர்களிடம் இருந்தும், புதுப்புது விஷயங்களை கற்கிறேன். இப்படத்தில், எஸ்.ஏ.சி., இயக்கத்தில் நடித்தது, முற்றிலும் வித்தியாசமான அனுபவம். என் திரையுலக வாழ்க்கைக்கான பாடத்தை படித்தது போல் உள்ளது,” என்றார்