கோமாளி படத்தில் ஒளிப்பதிவு, குறிப்பாக, சென்னையின் வெள்ளக் காட்சி, அனைவரையும் பிரமிக்க வைத்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர், ரிச்சர்ட் எம்.
நாதன் ஏற்கனவே, அங்காடி தெரு, கோ, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களுக்கு, ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அவரிடம், இது குறித்து கேட்டபோது, ”எந்த ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் முன், படப்பிடிப்பு தளத்துக்கு சென்று, மொபைலில் ஷூட்டிங் நடத்தி விடுவேன்.
இதனால், படப்பிடிப்பில் நேர விரயம் ஆகாது. பாலிவுட்டில், இப்படி ஓர் பழக்கம் உண்டு,” என்கிறார்.