Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

May 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காகவே இவரை கைது செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய மக்கள் முன்னணியால் நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (14) குறித்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டு மனு 

கொழும்பு 12, நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவினால் இம்முறைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டது.

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு | Ndf Complaint Arrest Tilvin Silva Immediately

இதன்போது சுகீஸ்வர பண்டாரவுடன், கட்சியின் கொழும்பு மாவட்ட செயலாளர் விகும் கித்சிறி, ஹோமாகம தொகுதி அமைப்பாளர் நிஷோன் இந்திக, பொரளை தொகுதி அமைப்பாளர் குஷான் மதநாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ரொமேஷ் சாலிந்த ஆகியோர் முறைப்பாடளிக்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures