Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

September 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை  காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக  தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள்  விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம்  மரைன் காவல் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கை   யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த  கலைக்குமார், ஆனந்தினி, தில்லையம்மாள் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன், கலை செல்வி உள்ளிட்ட 12 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து பின் 2019 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற நிலையில்  பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும்  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை (20) அதிகாலை  ஒரு  படகில் புறப்பட்டு தனுஷ்கோடி இரண்டாம்  மணல் திட்டில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் 2 இலட்சம் ரூபாய் கொடுத்து  படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில்  அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; எங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள்  பத்திரமாக மீட்டதாக  தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று (20) வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்களின் பின் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

Next Post

ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் – குமார வெல்கம கேள்வி

Next Post
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் - குமார வெல்கம கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி

June 15, 2026
ஆட்டி – திரைப்பட விமர்சனம்

ஆட்டி – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

June 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures