2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் ஆரம்பத்தில் ஜூன் 15ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பரீட்சை பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடாத்தப்பட்டது. இந்த ஆண்டு இப் பரீட்சைக்கு மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













