Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

June 7, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

Movies

தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்- தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – பசங்க புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ,அனந்திகா சனில்குமார் , சாண்டி மாஸ்டர் ,மிஷ்கின், தமிழ்குமரன், சந்தோஷ் சோபன், காயத்ரி, பூர்ணிமா ரவி மற்றும் பலர்.‌

இயக்கம் : பாண்டி ராஜ்

மதிப்பீடு : 2.5 / 5

‘தலைவன் தலைவி’ என்ற வணிக ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் தயாரான கொமடி திரில்லர் திரைப்படம் ‘பரிமளா & கோ’. அறிமுகமான மற்றும் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதால் யாராவது ஒருவர் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இந்தப் படத்தைக் காண பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா? வீணடிக்கப்பட்டதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னை போன்ற மாநகரம் ஒன்றில் சிங்கிள் பெட்ரூம் வாடகை வீட்டில் வசித்து வரும் பரிமளா- (ஜெயராம்) சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிகளுக்கு பராசக்தி ( சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி)  மதுமிதா ( அனந்திக்கா சனில்குமார்) என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். வாயாடியான பராசக்திக்கு அப்பாவியான சந்தோஷ் சோபன் மீது காதல் வருகிறது. அமைதியாக இருக்கும் மதுமிதாவை வர்கீஸ் எனும் சட்ட விரோதமான முறையில் போதை பொருளை விற்பனை செய்யும் ரவுடி.. காதல் தொல்லை கொடுக்கிறான். அத்துடன் வர்கீஸ் பரிமளாவின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்கிறான். இதனால் கூனி குறுகும் பரிமளா பேமிலியினர் வர்கீஸை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள். இதற்காக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம் ‘ திரைப்படத்தை பார்த்து தங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் வர்கீஸ் கொடூரமாக கொல்லப்படுகிறார். அவனை கொன்றது யார்? என்ற விசாரணையை காவல்துறை தொடங்குகிறது. இதில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் எம்பெருமான்(மிஷ்கின் ) பரிமளா ஃபேமிலி மீது சந்தேகம் கொள்கிறார். இறுதியில் வர்கீஸை கொன்றது யார்?  அதன் பின்னணி என்ன?  என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை. 

Bollywood & South Asian Film

போதை பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பிற்கும்.. உறவை தொலைத்தவர்களின் நிர்கதியற்ற நிலைக்கும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முயற்சித்து.. அதனை டார்க் ஹியூமர் கலந்து சொல்லி இருக்கிறார் பாண்டிராஜ். முதன் முதலாக பாண்டிராஜ் டார்க் ஹுயூமர் ஜேனரில் முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சி பலிக்கவில்லை. சில இடங்களில் மட்டுமே சின்னதாக சிரிப்பு வருகிறது. ஏராளமான கிளை கதைகள் தொடர்வதால் சோர்வும், குழப்பமும் ஏற்படுகிறது. 

வர்கீஸ் -மதுமிதா- கோமதி- ஆகியோரின் முக்கோண காதல் கதை கலகல.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – சந்தோஷ் சோபன் காதல் அக்மார்க் சினிமா ரொமான்டிக்.

பரிமளா – சுதந்திரம் ஜோடியின் நடிப்பு வழக்கமான  ரியாக்ஷன்.

எம் பெருமான் ( மிஷ்கின் ) நடிப்பு-  டிட்டோ ( ,,,) ரகம். ஆனால் இவருக்கான கதாபாத்திர வடிவமைப்பு கவனம் பெறுகிறது.

வர்கீஸின் வில்லத்தனம்- ஓகே ரகம். ஆனால் பேயாக மிரட்டுவது பூமர்.

யோகி பாபு- சிங்கம் புலி- பக்ஸ் பகவதி பெருமாள்- கூட்டணி…எக்ஸ்ட்ரா லக்கேஜ்- நோ கொமடி பேக்கேஜ்.

சில இடங்களில் உரையாடல் கவனம் ஈர்க்கிறது. சில இடங்களில் சின்ன புன்னகைக்காக பல நிமிடங்கள் திரையில் கதாபாத்திரங்கள் பேசுவதை பொறுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.‌

Movie Reviews & Previews

ஒளிப்பதிவு- பாடல்கள் – சிறப்பு. இவை ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.  அதிலும் முதல் பாதியில் ஓப்பனிங் சாங்… இரண்டாவது பாதியில்  பூர்ணிமா ரவி – சாண்டி மாஸ்டரின் பாடலை கேட்பதற்கும் , நடனமாடுவதற்கும் ஏற்றது.

பரிமளா & கோ – தூக்குதூக்கி

Previous Post

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

June 7, 2026
மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

June 7, 2026
நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

June 7, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

June 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures