தமிழ் தேசியத்திற்காக இயங்குவதற்காக, குரல் கொடுப்பதற்காக தலைவர் அவர்களின் சிந்தனையை உள்வாங்கியே புலம்பெயர் தேச அமைப்புகள் பலவும் எம் மக்களால் உருவாக்கப்பட்டது.
ஆனால் 2009இன் பின்னர் எங்கள் நாட்டில் அரசியல்வாதிகள் தடம்மாறியதுபோல புலம்பெயர் தேசத்திலும் சிலர் தடம் மாறினர். ஶ்ரீலங்கா அரசுடன் பேசுவதும் உறவாடுவதும் அவர்களின் வேலையானது.
இந்த நிலையில் இமலாயப் பிரகடனம் என்று எங்கள் தேசத்தை காட்டிக்கொடுக்க முற்பட்டபோது ஊடகப் போராளியாக நானும் வெகுண்டெழுந்து எதிர்த்துக் குரல் கொடுத்தேன். எம்மில் பலரும் களம் இறங்கிப் போராடினோம்.
இந்த நிலையில் சிலருக்கும் சில வேலைகளுக்கும் காலம் தக்க பாடத்தை உணர்த்தும் பதில் அளிக்கும் என்பதைப் போல கனேடிய தமிழ் காஸ்கிரசுக்கும் வரலாறு பாடம் கற்பித்துள்ளது.
இப்போது குறிப்பிட்டதொரு புலம்பெயர் அமைப்பில் உள்ள தனி ஒருவரின் நடவடிக்கை காரணமாக STREET Fest எனப்படும் நிகழ்வானது Tamils Day தமிழர் நாள் – எனும் புதிய பெயரில் தமிழ் தேசியத்தின் பக்கமாக வந்துள்ளது, தயவு செய்து தன்னலனுக்காக தாயக அரசியலை பயன்படுத்த முனைவோருக்கு இது ஒரு எச்சரிக்கை.
இது பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சிரிக்கை என்பேன்..வரலாறு எமது வழிகாட்டி. ஒற்றுமையுடன் விழிப்புடன் விடுதலையை வென்றெடுப்போம்!.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை













