இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு தனது முதலாவது போட்டியைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 431 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.
இதன்படி நியூசிலாந்து அணி இலங்கை அணியை விட 183 ஓட்டங்கள் முன்னிலையில், விளையாடும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்கியது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
அதனடிப்படையில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ரி. 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.