ராஜமவுலி இயக்கிய பிரமாண்ட படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்த படம் உலக அளவில் பல நாடுகளிலும் திரையிடப்பட்டு வசூல் சாதனை செய்தது. தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். தேசபக்தி கதையில் உருவாகிவரும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியாபட் உள்பட பலர் நடிக்கிறார்கள். 2020ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் படமாக்கி வந்த ராஜமவுலி, அடுத்து பல்கேரியாவில் முகாமிடப்போகிறார். பாகுபலி படத்தில் பிரபாஸ்-தமன்னா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி மட்டுமின்றி பல்வேறு காட்சிகளை அங்குள்ள பனிபடர்ந்த மலைப்பகுதிகளில் தான் படமாக்கினார். அதே பகுதியில் தற்போது மூன்று வாரங்கள் முகாமிட திட்டமிட்டுள்ள ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், அலியாபட்டின் பாடல் காட்சி உள்பட சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை அங்கு படமாக்கப்போகிறாராம்.