Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

September 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது.அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

எயார் பஸ் கொள்வனவு மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தவாறு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் நாமல் ராஜபக்‌ஷவுக்கும்,குறித்த நிறுவனத்துக்கும் இடையில் மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாற்றப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நீதிமன்ற விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத விடயங்களை தேசிய மக்கள் சக்தியின் சேறு பூசல் ஆதரவாளர்கள் போலியான  கருத்துக்களை சமூகமயப்படுத்துகிறார்கள்.

வளர்ந்து வரும் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் சிறைப்படுத்தியுள்ளது.அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம்.

ராஜபக்‌ஷர்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மற்றும் சர்வாதிகார செயற்பாட்டை சுட்டிக்காட்டும் தரப்பினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

அரசாங்கம் தனது நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஏதும் நடக்கலாம். அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

Previous Post

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

Next Post

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

Next Post
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

September 18, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்‌ஷவின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் – மனோஜ் கமகே விசனம்

September 18, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

September 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures