நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

