கனடாவில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகளில் பெரும் கேமராக்களை வைத்து நிகழ்வில் தம்மீது கவனம் செலுத்தும் வகையிலும் நிகழ்வுக்கு குந்தகமாக இருக்கும் வகையிலும் சரியான ஊடகப் பணிகளை ஆற்றாதவர்களின் உண்மை முகம் இப்போது எல்லோருக்கும் புலப்படத் தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிக்கின்றது.
உண்மையில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக, சுயாதீன ஊடகவியலாளர்களாக, சுயாதீன புகைப்படப் பிடிப்பாளர்களாக பலர் பல்வேறு மாற்றங்களையும் தாக்கங்களையும் உலகம் முழுவதும் செலுத்துகின்றனர்.
தங்கள் பெயர் காட்டாமல், தங்கள் முகம் காட்டாமல் கருத்துக்களுக்காகவும் ஊடகப் பணிக்காகவும் அப்படி உழைப்பவர்களின் பெறுமதி இந்த உலகில் நிச்சயமாக உணரப்படும். அதனை இன்றைய நாட்களில் மீளக் கண்கூடு காண்கிறோம்.
ஊடகப் போராளிகளை மதிக்கின்ற, சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படவியலாளர்களை மதிக்கின்ற வகையில் அண்மையில் நடிக்கை ஆண்ரியா கலந்துகொண்ட நிகழ்வும் அமைந்தது எமக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.

உண்மைக்கும் நேர்மைக்கும் எப்பொதும் உரிய இடம் இருக்கிறது. உண்மையை நேர்மையை எதனாலும் வீழ்த்த முடியாது. அர்ப்பணிப்பான ஊடகப் பணிதான் இந்த உலகத்திற்கு அவசியமானது.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை












