Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

March 27, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
தீர்மானம் மிக்க SAFF U20 போட்டியில் பூட்டானை சந்திக்கும் இலங்கைக்கு அரை இறுதிக்கு செல்ல ஒரு புள்ளியே தேவை

மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏழு நாடுகளுக்கு இடையிலான எட்டாவது 20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்பில் (Under 20 SAFF Championship) அரை இறுதிக்கு தகுதிபெற இலங்கைக்கு ஒரு புள்ளியே தேவைப்படுகிறது.

இந் நிலையில் மாலே தேசிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க ஏ குழு போட்டியில் பூட்டானை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

சாவ் சம்பியன்ஷிப்பில் ஏ குழவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் திங்களன்று மாலைதீவுகளை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலுக்கு மத்தியில் 0 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எனினும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாலைதீவுகளுக்கும் பூட்டானுக்கும் இடையிலான  போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால்  அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

புதன்கிழமை வரை நடைபெற்று முடிந்த ஏ குழு போட்டி முடிவுகளுக்கு அமைய நேபாளம் 2 வெற்றிகளுடன் (பூட்டான் 2 – 1, இலங்கை 1 – 0) 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருப்பதுடன் முதல் அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.

South Asians & Diaspora

இலங்கை ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 3 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது.

மாலைதீவுகளும் பூட்டானும் தலா ஒரு தோல்வி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் தலா ஒரு புள்ளியைப் பெற்று முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் பூட்டானுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், அல்லது அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் இலங்கைக்கு அரை இறுதியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இந் நிலையில், பூட்டானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடவுள்ளதாக 25 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியின் உதவிப் பயிற்றுநர்களில் ஒருவரான ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.

‘பூட்டானுக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் இலங்கை வீரர்களுக்கு வழங்கியுள்ளோம். இலங்கை இளையோர் அணி இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இம்முறை தெற்காசிய கால்பந்தாட்ட வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் விளையாடி வருகின்றது.

வீரர்களுக்கு எதிர்த்தாடும் உத்திகளை நானும் தடுத்தாடும் உத்திகளை சக உதவிப் பயிற்றுநர் மொஹமத் இம்ரானும் வழங்கி வருகிறோம். தலைமைப் பயிற்றுநர் அஹ்மத் அல் மன்னாய் எங்களை சிறப்பாக வழிநடத்துவதுடன் எங்களுக்கு சில பொறுப்புக்களைக் கொடுத்துள்ளார். அதற்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறோம். பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் இளம் வீரர்கள் வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள் என நம்புகிறேன்’ என ஒகஸ்டின் ஜோர்ஜ் கூறினார்.

Previous Post

சப்புகஸ்கந்தவில் போதைப்பொருள் தொகுதியுடன் ஒருவர் கைது : துபாய் கடத்தல்காரர்களுடன் தொடர்பு!

Next Post

நீ ஃபாரெவர் – திரைப்பட விமர்சனம்

Next Post
நீ ஃபாரெவர் – திரைப்பட விமர்சனம்

நீ ஃபாரெவர் - திரைப்பட விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures