அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏராளமான மெத்தைகள் பறந்து செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. டென்வர் நகரத்தில் படுகை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் வீசிய பலத்த காற்றில் அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் எல்லாம் பறக்க தொடங்கின. இதனை பார்த்த பொதுமக்களில் சிலர் பறக்கும் மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரோப் மானீஸ் என்பவர் இந்த காட்சியை படம் பிடித்து யூ-டுயூப்பில் பதிவிட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.