சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப, ரஷ்யா ‘Skybot F-850’ என்ற புதிய மனித வடிவிலான ரோபோவை தயார் செய்துள்ளது.
ரஷ்யாவில் இயங்கி வரும் புகழ்பெற்ற ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி நிறுவனம், செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய Skybot F-850 ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘பெடார்’ (Fedor) என பெயரிட்டுள்ள அந்நிறுவனம், ரிமோட் ஆப்ரேட்டர் ஒருவரின் அசைவுக்கு ஏற்ப, ரோபாவானது தனது கைகளை அசைத்து, கருவிகளை பயன்படுத்துவதற்கான பயிற்சியை வழங்கி வருகிறது.
மேலும் ‘புஷ் அப்’ என்ற உடற்பயிற்சி, பொருட்களை தானே பிடிப்பதற்கான சில வேலைகளை தானே செய்யவும் பயிற்சி அளிக்கிறது. இந்த ரோபோவானது, வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைப்பதற்கு பதில், ரோபோக்களை அனுப்பி வைத்து நிலவை ஆய்வு செய்யும் வகையில், ரஷ்யா இந்த ரோபோவை உருவாக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.