அமெரிக்காவில், ஓடுதளத்தில் தரையிறங்கிய ஜெட் விமானம், தீப்பற்றியது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான, ஓய்வுபெற்ற ரேஸ் கார் ஓட்டுனர் டேல் ஏர்ன்ஹார்ட் ஜூனியர் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று டென்னிசி மாநிலத்துக்கு வந்தார்.
அவரது விமானம் எலிசபெத்தான் முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, திடீரென ஓடுதளத்தை கடந்து சிறிது தூரம் சென்று தீப்பற்றியது.
விமானத்தில் இருந்த இரு விமானிகள் மற்றும் ஏர்ன்ஹார்ட் ஜூனியர் குடும்பத்தினர் ஆகிய 5 பேர், விமானம் தீப்பற்றுவதற்கு முன் வெளியேறியபோதும், ஏர்ன்ஹார்ட் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னெச்சரிக்கையாக அந்த விமான நிலையம் மற்றும் அருகிலிருந்த நெடுஞ்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.