இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சங்கத் தமிழன். இந்த படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம், காரைக்குடி மற்றும் அதை சுற்றியிருக்கும் கிராமங்களிலேயே முழுக்க முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது. படபிடிப்பு நடக்கும்போது, விஜய் சேதுபதியின் காலில் அடிபட்டது. உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ம
ருத்துவர்கள், அவரை, பதினைந்து நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் தொடர் ஓய்விலிருக்க, பதினைந்து நாட்கள் படபிடிப்பு தடைபட்டது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் துவங்கியுள்ளன. இதையடுத்து, இந்த படத்தின் திரையிடும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.