நடிகர், இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு, ‛சக்கரக்கட்டி, கண்டேன், சித்து பிளஸ 2′ உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார். எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஒரு வெற்றி கிடைக்காதா என ஏங்கி வருகிறார்.
இதன் வெளிப்பாடாக கடந்த சனிக்கிழமை அவருக்கு பிறந்தநாள். குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் சாந்தனு.
அதன் உடன், ‛‛மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எல்லா நாட்களும் கொடூரமான நாட்களாகவே நகருகின்றன. சவால்களும், நெருக்கடிகளுமே வெகு நாட்களாக நான் சந்தித்து வருபவை. இந்த பிறந்தநாளில் இருந்தாவது, என் வாழ்க்கையில் சந்தோஷங்களையும்; சாதகமான அம்சங்களையும் சந்திப்பேன் என நம்புகிறேன். வாழ்த்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.