மலையாளத்தில் தற்போது பிரித்விராஜ் நடிப்பில், வரும் செப்-5ஆம் தேதி ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் பிரதர்ஸ் டே. நகைச்சுவை நடிகரான கலாபவன் சாஜன் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக மடோன செபாஸ்டியன், மியா ஜார்ஜ், பிரயாகா மார்டின், ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள பட இயக்குனருமான நாதிர்ஷா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியும் உள்ளார் நடிகர் தனுஷ். அந்தப் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இதே நாதிர்ஷா மலையாளத்தில் இயக்கிய கட்டப்பனையில் ஹிரித்திக் ரோஷன் என்கிற படத்தின், தமிழ் ரீமேக்காக உருவாக்கி வருவதாக சொல்லப்படும் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படத்தை, விஜய் டிவி புகழ் தீனா நடிப்பில் நடிகர் தனுஷ் தான் தயாரித்து வருகிறார் என்கிற செய்தி சைலன்ட் மோடில் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.