Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார்

December 19, 2018
in News, Politics, World
0

நிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.

புத்தகங்களில் அறிந்துகொள்ள முடியாத விடயத்தை கடந்த ஐம்பது நாட்களில் அனுபவம் மூலமாக மக்கள் உணர்ந்துவிட்டனர் என ஜே.வி.பி சபையில் கடுமையாக சாடியது. நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் இறுதி சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் இணைந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் சபை ஒத்திவைப்புவேளையில் முன்வைத்து உரையாற்றியபோது அவர் கூறுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடந்த சில நாட்களாக நிறைவேற்று அதிகாரி எவ்வாறு செயற்பட்டார், மக்கள் ஆணையை எவ்வாறு எட்டியுதைத்து தன்னிச்சையாக செயற்பட்டார் என அவதானிக்க முடிந்தது.

கடந்த சில நாட்களாக அவர் நடந்துகொண்ட விதம் எவ்வாறு என்பது அறிய முடிந்தது. கடந்த 50 நாட்களாக நாட்டின் ஜனநாயகத்திற்கும் , மக்கள் ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயட்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை அடுத்து இனியும் நிறைவேற்று அதிகாரம் அவசியமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவரப்பட்டபோது ” இந்த ஆசனத்தில் பைத்தியக்காரன் அமர்ந்தால் என்ன ஆகும் “என என்.எம்.பெரேரா ஒருமுறை ஒருமுறை கேட்டாராம். ஆனால் அப்போது எம்மால் அதனை உணர முடியவில்லை. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன அதனை நிருபித்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக் ஷவை தாக்கியுள்ளார். இப்போதாவது இவற்றை அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள். 20 ஆம் திருத்தத்தில் மாற்றுத் திருத்தங்கள் எதனையும் செய்ய வேண்டும் என்றால் அதனை செய்வோம். வாக்கியங்களில் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வோம், ஆனால் நிறைவேற்று முறைமையினை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

Previous Post

பைத்தியக்காரனிடம் நிறைவேற்று அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்; மைத்திரி பதிலளித்துவிட்டார்: ஜே.வி.பி

Next Post

மஹிந்தவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது: விஜயமுனி சொய்ஸா

Next Post

மஹிந்தவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது: விஜயமுனி சொய்ஸா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures