தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யாவில் விஷால் – ராசிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளனர். வெங்கட்மோகன் இயக்கியிருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இன்று(மே 1) அனிருத் பாடிய கண்ணே கண்ணே என்ற பாடலின் லிரீக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள அனிருத், மீண்டும் ஒரு கண்ணே கண்ணே என்று பதிவிட்டுள்ளார்.