மே 1-ந்தேதியான இன்று நடிகர் அஜித் குமாருக்கு பிறந்தநாள். அதனால் அவரது ஏராளமான திரையுலக நண்பர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அதேபோல், அஜித்தின் ரசிகர்கள் தமிழகமெங்கிலும் பல பகுதிகளில் கொண்டாடி வருகிறார்கள். அதோடு ஆதரவற்றோர், வயதானோர் இல்லங்களுக்கு சென்று இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், வீணை இசைக்கலைஞரான ராஜேஷ் வைத்யா, அஜித்தின் சூப்பர் ஹிட் பாடமான தீனாவிலிருந்து “வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில…” என்ற பாடலை வீணையிலேயே வாசித்து, அந்த வீடியோவை வெளியிட்டு அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.