தீபத்திருநாள் வாழ்த்துகள்!
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.
தீபங்களின் ஒளி இல்லங்களையும் உள்ளங்களையும் நிறைப்பதைப் போல, ஒவ்வொருவரது வாழ்விலும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் புதிய நம்பிக்கைகளும் மலரட்டும். இருள் விலகி ஒளி பிறக்கட்டும். துயரங்கள் நீங்கி நிம்மதி பிறக்கட்டும்.
பல தசாப்தங்களாகப் போர், இழப்பு, இடப்பெயர்வு, உரிமை மறுப்பு எனப் பெரும் வலிகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் உண்மையான விடியல் பிறக்க வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் மதிக்கப்பட்டு, நீதி, சுயநிர்ணய உரிமை, சமாதானம் ஆகியவை நிலைபெறும் தேசமாகத் தமிழர் தாயகம் மலர வேண்டும்.
இந்தத் தீபத்திருநாள் ஒவ்வொரு தமிழ் உள்ளத்திலும் நம்பிக்கையின் ஒளியை ஏற்றட்டும். அன்பும் அறமும் மனிதநேயமும் நிறைந்த உலகம் உருவாகட்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
ஆசிரியர் பீடம் – ஈஸி24நியூஸ்












