Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷெனான் விமான நிலையத்தில் புறப்பட தயாரான விமானத்திலிருந்து திடீர் தீ

August 15, 2019
in News, Politics, World
0

அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களை ஏற்றி செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாரானபோது திடீரென தீப்பற்றியது. இருப்பினும் அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு ராணுவ துருப்புகள், அவர்களது குடும்பங்களை ஓம்னி ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்கிறது.

அவ்வாறு வரும் விமானங்கள், அயர்லாந்தில் உள்ள ஷெனான் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்வது வழக்கம். அந்தவகையில், வியாழக்கிழமை காலை, அந்நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-300 ரக விமானம் பயணிகளுடன் புறப்பட தயாரானபோது, திடீரென அதன் லேண்டிங் கியர் பகுதியில் தீப்பற்றி, புகை கசிந்தது.

இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என ஓம்னி ஏர் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து,ஷெனான் விமான நிலையத்தில் சில விமானங்களின் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

விமானத்தைக் கடத்தப் போவதாக முதியவர் மிரட்டல்

Next Post

நல்லூரில் ஸ்கானர் பரிசோதனை ஆரம்பம்

Next Post

நல்லூரில் ஸ்கானர் பரிசோதனை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures