Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்குக்கு வரும் பிரதமர் ரணில் !!

August 14, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதற்கமைய இன்று மாலை வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், மாலை 3 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கவுள்ளார். உலக வங்கியின் நிதியுதவியில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள அவர், நாளை காலை 7 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதன்பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அங்கு சைவ சமய தலைவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதோடு, சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் காலை மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ள பிரதமர், தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதன் பின்னர் 11 மணியளவில் திருநெல்வேலி விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கவுள்ளார்.

அத்தோடு, மதியம் 2 மணிக்கு குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதோடு, 3.15 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் இயன் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் யாழ். நாகவிகாரையில் வழிபாடுகளிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, நாளை மறுதினம் காலை 9 மணிக்கு இந்தியாவினால் யாழில் அமைக்கப்படும் கலாசார நிலைய கட்டுமான பணிகளை பிரதமர் பார்வையிடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிட்னி அகதி முகாம் தாக்குதல் சம்பவம்: 8 பேர் மீது வழக்குத்தாக்கல்!

Next Post

கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

Next Post

கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures