Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

நாட்டின் வரி வருமானத்தில் கணிசமான ஒரு பகுதி விவசாய சமூகத்திற்காகவே செலவிடப்படுகிறது. நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு  அமைவாகவே  விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யவேண்டும். குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நெல்லுக்கான உத்தரவாத விலையை நிலையாக பேணுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

“நீர்ப்பாசன பெருமை – எமது மரபுரிமை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், மகா மங்கடவல குளக்கட்டு புனரமைப்பு மற்றும் மதகுடன் கூடிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

விவசாயிகளின் நலனுக்காக பில்லியன்கணக்கான ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருவாயும் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. நெல் விவசாயிகள் மட்டுமன்றி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும், மிளகு ஏற்றுமதியாளர்களும் கூட தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

நெல் உற்பத்தி துறையில் விலை ஏற்ற இறக்கங்கள்  கவலையானதாக காணப்படுகிறது. நிலையான நெல் விலையைப் பேணுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுச் சந்தையில் எமது நாட்டு அரிசிக்கு கேள்வி  இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் போது விவசாயிகள் நெல்லை ஒப்படைக்கலாம்.

மேலும் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதனை  களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டாம். இல்லையெனில், இந்த முறை ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்படும். நெல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஒரு பிரச்சினையாகும். நெல்லுக்கு ஒரு நிலையான விலையைப் பேண நாங்கள் முயற்சித்து வருகிறோம். செலவுகள் அதிகரித்து, உற்பத்திச் செலவு கூடும் போது, விலையும் அதிகரிக்க வேண்டும்.  உற்பத்திச் செலவுகளுக்கான மானியங்களை வழங்கும் அதேவேளையில், நெல் விலையை முடிந்தவரை நிலையானதாக வைத்திருப்போம்.

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாட்டில் எந்தவொரு தொழிற்துறையும் வீழ்ச்சியடைய இடமளிக்கவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. விவசாய சேவை நிலையங்கள் ஊடாக நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக, தனியார் உர நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உரம் வழங்கி பங்களிப்பு செய்துள்ளோம்.

தனியார் நிறுவனங்கள் சுரண்டுவதற்காக மட்டுமே இருக்கின்றன என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் உரங்களின் விலையும் குறையும். எமது விவசாய சமூகம் பொதுமக்களின் பரந்த நலன்களைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Previous Post

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

Next Post

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

Next Post
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures