தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்காக பொலிஸார் ஒருபோதும் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கம்பகா, வேயங்கொடவில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது-:
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நட வடிக்கைகயில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்காக ஒருபோதும் செயற்படுவதில்லை.
பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. எவருக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவில்லை.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண அரசியல் நிலைமைகளிலும் பொலிஸார் நடுநிலையாகவே தமது பணிகளை முன்னெடுத்தனர். கூட்டு அரசின் காலப்பகுதியிலும் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்பட்டு வந்தது – என்றார்.

