புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அமைச்சரவையிலுள்ள 18 அல்லது 20 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஏனையோர் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் அமைச்சரசாக பதவியேற்பவர்களில் நிதி அமைச்சுப் பதவியும் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று மாலை அமைச்சரவைக்கென தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

