Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுப்போம் “ – சீனா எச்சரிக்கை

September 18, 2018
in News, Politics, World
0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள புதிய வரிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது. மேலும் சீன இறக்குமதி பொருள்களுக்கு வரி விதிப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25% சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% மடுமே வரி விதிக்கப்பட்டு வந்தது. இது நியாயமான வர்த்தகம் இல்லை எனக் கூறி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர் வரை அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. இதற்கு சீனா தரப்பிலும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி, மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி வந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.

சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள், நாற்காலிகள், கைப்பைகள் ஆகியவற்றுக்கு மீண்டும் இறக்குமதி வரியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, சுமார் 200 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10% வரி விதித்திருக்கிறார் ட்ரம்ப். இந்த வரிவிதிப்பு வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வரிவிதிப்புக்கான தங்கள் அதிருப்தியையும், இதற்கான பதிலடியையும் அமெரிக்கா சந்திக்கும் என்று சீனா கூறியுள்ளது. இது குறித்து சீனா தரப்பில் கூறியதவது, “ அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் இறக்குமதி வரி இருதரப்புக்கும் நிச்சயமற்ற பேச்சுவார்த்தைத் தன்மையை உருவாக்கி வருகிறது. எங்களுக்கு வேறு வழி இல்லை. இதற்கான பதிலடியை கொடுத்தே தீருவோம்.

உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே இடையேயான வர்த்தக யுத்தத்தை அமெரிக்கா அதிகரிக்கச் செய்துள்ளது. அமெரிக்கா அதன் செயல்களுக்கான எதிர்மறை விளைவை விரைவில் சந்திக்கும் ” என சீனா கூறியுள்ளது.

அமெரிக்க பொருள்களின் மீதான இறக்குமதி வரியை சீனா மேலும் அதிகரித்தால், 267 பில்லியன் டாலர் வரியை அதிகரிக்க அமெரிக்க முயலும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மீண்டும் ஒரு முறை நியாயமற்ற வர்த்தக முறையை முடிவுக்கு சீனா கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், ஏனெனில் சீனாவின் ஜனாதிபதி மீது எனக்கு மிகுந்த மரியாதையும், மதிப்பும் உள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த வாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு வழக்கி வரும் மானியத்தை நிறுத்த உள்ளதாக டிரம்ப் கூறியது இரு நாட்டிற்கு இடையே பிளவை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

Next Post

சர்வதேச எல்லையில் இந்திய வீரர் மாயம்

Next Post

சர்வதேச எல்லையில் இந்திய வீரர் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures