Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சார கட்டண அதிகரிப்பை நாங்கள் கோரவில்லை | தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர்

November 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதித் தகவல்கள் மின் உற்பத்திச் செலவு மதிப்பீடுகளை மட்டுமே உள்ளடக்கியதாகவே இருந்ததே தவிரவும் மின்சார கட்டண அதிகரிப்பை நாங்கள் கோரவில்லை என்று தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய மின்சாரத் துறைச் சட்டத்தின் கீழ், மின் கட்டண உயர்வுகளைக் கோரும் பொறுப்பு தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு இல்லை. ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மதிப்பீட்டுக்கான அவசியமான செலவு மற்றும் உற்பத்தி முன்னறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதுடன் எமது பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

முந்தைய மூன்று மாதங்களில் கிடைத்த மழைவீழ்ச்சி வடிவங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைப் பயன்படுத்தியே ஆரம்பச் செலவு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. இருப்பினும், அதனைத் தொடர்ந்து பெய்த மழைவீழ்ச்சி நாட்டின் நீர் மின் உற்பத்தியை  அதிகரித்ததோடு, மின்சாரத் துறை மீது எதிர்பார்க்கப்பட்ட நிதிச் சுமையைக் குறைத்துள்ளது.

நீர் மின் உற்பத்திக் கட்டணமானது கணிக்கப்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்கும். அதனால் நுகர்வோர் மின் கட்டணங்களை அதிகரிக்காமல் மின்சாரத்துறை நட்டமற்ற நிலையை அடைய இது இயலுமைப்படுத்துவதாக இருக்கும்.

மின்சாரத்துறை பங்காளர் நிறுவனங்களின் நிதிச் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான நான்காம் காலாண்டு மின் கட்டண மீளாய்வுக்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடனான கலந்தாலோசனை ஆவணம் 4.4 பில்லியன் ரூபா உத்தேச வருமான பற்றாக்குறையை அடையாளம் கண்டுள்ளது.

அந்த ஆவணத்தின்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சார விநியோகத்தின் மொத்தக் கணிப்பிடப்பட்ட செலவு 157.3 பில்லியன் ரூபாவாக உள்ளதோடு, மின்சார விற்பனை மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 154 பில்லியன் ரூபாவாகும். 3.3 பில்லியன் ரூபா செயற்பாட்டு வருமானப் பற்றாக்குறையானது, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து முன்னோக்கிக் கொண்டுவரப்பட்ட மேலும் 1.1 பில்லியன் ரூபா பற்றாக்குறையும் சேர்க்கப்படும்போது 4.4 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கிறது.

கணிக்கப்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மின்சார விற்பனை வருமானத்தில் 2.88சதவீத அதிகரிப்புத் தேவைப்படுகின்றன. இருப்பினும், தனது ஆரம்ப மதிப்பீட்டைத் தொடர்ந்து, சில மின் உற்பத்தித் செலவுகளைத் தவிர்த்துவிட்டு இரண்டாம் காலாண்டில் பயன்படுத்தப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி தொடர்பான செலவு மதிப்பீடுகளைத் திருத்தியமைத்ததன் மூலம், தேவைப்படும் உத்தேசக் கட்டண உயர்வை 1.46சதவீதமாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறைத்தது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சொந்தக் கலந்தாலோசனை ஆவணமானது இந்த தரவுகளை மின்சாரத் துறை உரிமதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் விவரிப்பதோடு, அந்தச் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் தேவையான வருமான அதிகரிப்பையும் அடையாளம் காட்டுகிறது என்றார்.

Previous Post

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

Next Post

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

Next Post
யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

November 8, 2026
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண அதிகரிப்பை நாங்கள் கோரவில்லை | தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர்

November 8, 2026
ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்!

November 8, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அடுத்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அராங்கம் ஆயத்தம்!

November 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures