தமிழ்த் திரைப்படப் பாடல்களில் கடந்த வருடம் வெளிவந்த ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல் யு-டியுபில் பல சாதனைகளைப் படைத்தது. இந்த வருடம் ஜனவரி மாதம் 2ம் தேதி யு-டியுபில் இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது முதல் அடுத்தடுத்து பல சாதனைகளைப் புரிந்தது.
இப்போது மேலும் ஒரு சாதனைக்கு மிக அருகில் உள்ளது. தற்போது இந்தப் பாடல் யு-டியூபில் 69,64,89,281 பார்வைகளைக் கடந்துள்ளது. இன்னும் 36 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 70 கோடி பார்வைகளைத் தொடும். அதாவது 700 மில்லியன் சாதனை.
இந்திய அளவில் இதுவரையில் பத்துக்கும் குறைவான பாடல்கள் தான் 700 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. ஏற்கெனவே, இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் டாப் 10 பட்டியலில் ‘ரவுடி பேபி’ பாடல் இருக்கிறது.