முருகதாஸ் இயக்கத்தில் ‛தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதையடுத்து, ‛சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது சூர்யாவின் 39வது படத்தை இயக்க தயாராகி வரும் சிவா, அதை முடித்ததும் ரஜினி படத்தை இயக்குகிறார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாஸ் கதையாக அந்தப் படம் இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்தாண்டு தீபாவளி நாளில் வெளியிட திட்டமிடப்படும் ரஜினி – சிவா கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கக் கூடும் என்ற தகவலும் பரவி இருக்கிறது.













