யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் மருதங்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அங்கு சென்ற மருதங்கேணி காவல்துறையினர் குறித்த அது தொடர்பில் ஆய்வு செய்துள்ளனர்.
அழிப்பதற்குரிய நடவடிக்கை
இந்தநிலையில் இது இராணுவத்தினர் வெடிபொருட்களை வைத்திருக்கும் அங்கி என்றும், அதில் நீண்ட நாள் பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் காணப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உரிய அனுமதியை பெற்று குறித்த பொருளை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












