முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை அமைத்துவிட்டு பார்வையாளராக இருக்காமல், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்வது போன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏன் பெற்றுக்கொள்ளமுடியவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழங்களுக்கு உடல் வலுவூட்டும் நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு விளையாட்டுக்கழகங்களுக்கு சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான உடல் வலுவூட்டும் நிலையங்களுக்கான உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் மற்றைய சமூகத்தின் அரசியல்வாதிகளை குறைகூறுவதை விடுத்து தாங்கள் சரியான வழிகளை தேர்ந்தெடுத்து சரியான முறையில் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

