Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்காலில் புலிகளின் தங்கம்? ஏமாற்றத்துடன் முடிந்தது?

September 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முள்ளிவாய்க்காலில் புலிகளின் தங்கம்? ஏமாற்றத்துடன் முடிந்தது?

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி கடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவந்தன.

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப்பணிகளில் எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில், குறித்த அகழ்வுப்பணிகள் பெருத்த ஏமாற்றத்துடன் நேற்று புதன்கிழமை (27) முடிவிற்கு வந்தன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டதாக வவுனியா வடக்கு – நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஜெயசிங்கம் சஞ்சீவன் என்பவர் அம்பாறை பொலிஸ் தலைமை காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமை அம்பாறை பொலிஸ் தலைமைக்காரியாலயப் பொலிஸார் இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு கொண்டுச் சென்று அகழ்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியோடு குறித்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி கடந்த 25ஆம் திகதி,  திங்களன்று குறித்த இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய முன்னாள் விடுதலைப்புலி அமைப்பின் போராளி ஜெயசிங்கம் சஞ்சீவன், அம்பாறை பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிட்சகர் ரி.ஜெயசேன, தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடையவியல் பொலிஸார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குறிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.

அந்தவகையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற முதலாம் நாள் அகழ்வுப்பணிகளில் சில தகரங்கள் மாத்திரம் இனங்காணப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் திகதியும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படபோது, அகழப்பட்ட குழியிலிருந்து நீர் ஊற்றெடுத்த காரணத்தினால், அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு, நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியிலுள்ள நீரை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டு சிறிய கனகர இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வுச் செயற்பாடுகள் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது காலையில் நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியில் ஊற்றெடுத்திருந்த நீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு, குறித்த அகழ்வுப் பணிக்கு பெரிய கனரக இயந்திரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நண்பகல் பெக்கோ இயந்திரத்தை குறித்த இடத்திற்கு வரவளைத்து மூன்றாவது நாள் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஜெயசிங்கம் சஞ்சீவன் என்னும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளி அகழ்வுப்பணிக்கென மேலதிகமாக ஒருமணிநேரம் வழங்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபனிடம் கோரியநிலையில், மேலதிகமாக ஒருமணி நேரம் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு நீதிபதி அனுமதித்திருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து மேலதிகமாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின்போதும் எவ்வித பொருட்களும் இனங்காணப்படாத நிலையில் அகழ்வுப்பணிகளை நிறுத்தி, அகழப்பட்ட குழியை மூடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமை பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகள், பெருத்த ஏமாற்றத்துடன் நிறைவிற்கு வந்தன.

குறித்த அகழ்வுப் பணியின்போது 13 அடி, பத்து அங்குலம் ஆழமானதும், பாரிய அகலமான குழி தோண்டப்பட்டதில் குறித்த பகுதியிலிருந்த ஆலமரம், பனைமரம், நாவல் மரம் உள்ளிட்ட பல மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. 

மேலும் , இவ்வாறு அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற குறித்த பகுதியில், அனுமதியின்றி அகழ்வுகளை மேற்கொள்வதற்கு பலதடவைகள் முயற்சிகள் இடம்பெற்றதாகவும், அவ்வாறு முயற்சி மேற்கொண்டர்களை பொலிஸார் கைதுசெய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் | ஐ.நாவில் கஜேந்திரகுமார்

Next Post

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

Next Post
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures