மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‛மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். 30 ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தவர், கமல் உடன் மட்டும் இதுவரை நடிக்கவே இல்லை.
கமல் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் விவேக். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2′ படத்தில் விவேக்கும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.