Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசா­ரணை ஆரம்பம்

May 6, 2019
in News, Politics, World
0

தனது மகனின் பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்வின் போது ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்­டலில் வைத்து கைது செய்­யப்­பட்டு டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாதாள உலகத் தலை­வனும் சர்­வ­தேச போதைப்­பொருள் கடத்தல் மன்­ன­னு­மான மாக்கந்­துரே மதூஷ் என அழைக்­கப்­படும் சம­ர­சிங்க ஆராச்­சி­லாகே மதூஷ் லக்‌­ஷித டுபா­யி­லி­ருந்து நேற்று நாடு கடத்­தப்­பட்­டுள்ளார்.

நேற்று அதி­காலை 5 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த யூ.எல்.226 எனும் விமா­னத்தில் மாக்­கந்­துரே மதூஷ் நாடு­க­டத்­தப்­பட்­டி­ருந்தார். விமான நிலை­யத்தில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவரைப் பொறுப்­பேற்­ற­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஏற்­க­னவே நேற்று முன்­தினம் இரவு யூ.எல். 226 எனும் விமா­னத்தின் பய­ணிகள் பட்­டியல் கட்­டு­நா­யக்க விமான நிலைய உளவுத் துறைக்கும் சி.ஐ.டி.க்கும் கிடைத்த நிலையில் அதில் மதூஷ் வரு­வது உறுதி செய்­யப்­பட்ட நிலையில், இரா­ஜ­தந்­திர தக­வல்கள் ஊடாக அதனை மேலும் உறுதி செய்து மதூஷை பொறுப்­பேற்க தயா­ராக இருந்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு அவரை இவ்­வாறு தமது பொறுப்பில் எடுத்­துள்­ளது.

கட்­டு­நா­யக்க விமான நிலைய சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்­கப்­பட்ட அவர் அங்கு சில மணி நேரம் மட்­டுமே தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில், மூன்­ற­டுக்கு விஷேட அதி­ரடிப் படை பாது­காப்­புடன் நேற்று முற்­பகல் வேளையில் உட­ன­டி­யாக கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­க­மான 4 ஆம் மாடிக்கு அழைத்து வரப்­பட்டார்.

தற்­போது அவர் அங்கு தடுத்து வைக்­கப்­பட்டு சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், மதூஷின் கணக்கில் உள்ள அனைத்து கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்­தல்கள் தொடர்­பி­லான குற்­றங்கள் தொடர்­பிலும் விசா­ரணை செய்யும் பொறுப்பு முழு­மை­யாக சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

முன்­ன­தாக ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் கைது செய்­யப்­பட்ட மாகந்­துரே மதுஷ், இலங்­கையில் தமக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக அந்­நாட்டின் நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்து தன்னை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி­யி­ருந்தார். அதன் தீர்ப்பு எதிர்­வரும் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும், மாகந்­துரே மதுஷை நாடு கடத்­து­மாறு இலங்கை அரசின் சார்பில் வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, அந்­நாட்டு அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அதன்­படி அமீ­ரக அரசு, கொள்கை அளவில் எடுத்த தீர்­மா­னத்தை இடை­யீட்டு மனு­வூ­டாக அந் நாட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்த நிலை­யி­லேயே மதூஷ் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

2015 ஆம் ஆண்டு மாகந்­துரே மதூஷ் வர்­ண­கு­ல­சூ­ரிய அஜித் அரங்க எனும் பெய­ரி­லான போலி பெயரில் தயா­ரிக்­கப்­பட்ட கடவுச் சீட்டில் டுபாய்க்கு சென்­றுள்ளார். அதில் அவ­ரது முக­வ­ரி­யாக இலக்கம் 241/ ஏ, ஜா எல வீதி , கம்­பஹா என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் மதூஷின் உண்­மை­யாக முக­வரி மாவ­ரல பொலிஸ் பிரிவில் உள்ள மாகந்­துரே எனும் ஊராகும். அங்கு தற்­போது மதூஷின் மனைவி வசித்து வரு­கின்றார்.

மதூ­ஷுக்கு எதி­ராக சுமார் 50 கொலை­களும் கொலை முயற்சி சம்­ப­வங்கள் மற்றும் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் குற்­றச்­சாட்­டுக்­களும் உள்­ளன.

பொலிஸ் தலை­மை­யக தக­வல்­களின் பிர­காரம், அதில் பிர­தா­ன­மாக 2017.மே.9 ஆம் திகதி பிலி­யந்­த­லையில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்­றி­வ­லைப்பு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் ரங்க ஜீவ மீது துப்­பாக்கிச் சூடு நடத்­திய சம்­ப­வத்தில் மதூஷ் முக்­கிய சந்­தேக நப­ராக சேர்க்­கப்­பட்­டுள்ளார். அச்­சம்­ப­வத்தில் பொலிஸ் கான்ஸ்­டபிள், சிறுமி ஒருவர் என இருவர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். மேலும் பலர் காய­ம­டைந்­தனர்.

2017.பெப்ர்­வரி மாதம் 27 ஆம் திகதி களுத்­துறை பகு­தியில் சிறைச்­சாலை பஸ் வண்டி மீது தாக்­குதல் நடத்தி இரு சிறை அதி­கா­ரிகள், சமயன் எனும் பாதாள உலக குழு உறுப்­பினர் உள்­ளிட்ட 5 சந்­தேக நபர்கள் என 7 பேரைக் கொலை செய்த சம்­ப­வத்­திலும் மதூஷ் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை 2018.3.27 அன்று சாந்த குமார அல்­லது கொஸ்­மல்லி என்­ப­வரை கடத்தி கொன்று அவ­ரது தலையை வேறாக வெட்டி கொழும்பு – வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரிவில் கொண்­டு­வந்து போட்ட சம்­ப­வத்­திலும் மதூஷே பிர­தான சந்­தேக நப­ராக விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர். இத­னை­விட பல கொலைகள் மற்றும் கொள்­ளைகள், போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் மதூஷ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் ச்சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கூறினார்.

இத­னை­விட 2006.ஜூன் 11 ஆம் திகதி கம்­பு­று­பிட்டி பகு­தியில் வைத்து தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்­தெட்­டி­யவை கொலை செய்­தமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பல நீதி­மன்­றங்­க­ளாலும் மதூ­ஷுக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்ட பிடி­யா­ணை­களும் உள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

முன்­ன­தாக இலங்­கையில் இடம்­பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப் பொருள் கடத்­தல்­களின் பின்­ன­ணியில் இருக்கும் மிக முக்­கிய புள்­ளி­யான பாதாள உலக தலைவன் மாகந்­துரே மதூஷ் எனப்­படும் சம­ர­சிங்க ஆரச்­சி­லாகே மதூஷ் ல­க்ஷித்த ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தலை நக­ரான அபு­தா­பியில் 6 நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த பெப்­ர­வரி 5 ஆம் திகதி அதி­காலை, கைது செய்­யப்­பட்டார். தனது மகனின் முத­லா­வது பிறந்த நாள் களி­யாட்ட நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டி­ருந்த போது அவர் இவ்­வாறு இலங்கை உளவுத் துறைக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லுக்கு அமைய – ஐக்­கிய அரபு அமீ­ரக போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுடன் இணைந்து முன்­னெ­டுத்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யி­லேயே கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். .

இதன்­போது டுபாயில் இருந்­து­கொண்டு பாகிஸ்தான் ஊடாக இலங்­கைக்கு போதைப் பொருள் கடத்தும் முக்­கிய புள்­ளி­யான பல்­வேறு குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய கஞ்­ஜி­பான இம்ரான் மற்றும் மாகந்­துரே மதூஷின் மிக நெருங்­கிய சகா­வான ஜங்கா, ரொட்­டும்பே அமில உள்­ளிட்­டோரும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக குறித்த களி­யாட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இலங்­கையின் பிர­பல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவ­ரது மகன் நதீக பெரேரா, தெவனி இனிம எனும் சிங்­கள நாட­கத்தின் நடி­க­ரான ரயன் உள்­ளிட்­டோரும் இதன்­போது கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். மொத்­த­மாக 31 பேர் இதன்­போது கைது செய்­யப்­பட்­டனர்.

அபு­தா­பியில் கைதான அவர்கள் முதலில், டுபாய்க்கு அழைத்து செல்­லப்­பட்டு அங்கு சிறைக் கூண்­டு­களில் அடைக்­கப்­பட்­டனர். அதன் பின்னர் இரத்த, சிறு நீர் பரி­சோ­த­னை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

அத­னை­ய­டுத்து கடந்த மார்ச் 27 ஆம் திகதி அந்த 31 பேரில் பாடகர் நதீமால் பெரே­ராவும், லலித் குமார எனும் சிறைச்­சாலை அதி­கா­ரியும் முதலில் நாடு கடத்­தப்­பட்­டனர். அதன் பின்னர் கஞ்­சி­பானை இம்ரான் உள்­ளிட்ட ஏனை­யோரும் படிப்­ப­டி­யாக நாடு கடத்­தப்­பட்­டனர்.

அதனைத் தொடர்ந்து மார்ச் 28 ஆம் திகதி கஞ்­சி­பானை இம்ரான் எனப்­படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் உள்­ளிட்ட 4 பேர் நாடு கடத்­தப்­பட்­டனர். அவர்­களில் கஞ்­சி­பானை இம்ரான் பய்ங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார்.

அத்­துடன் ஏபரல் 2 ஆம் திகதி, மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் லங்கா சஜித் பெரேரா ஆகியோர் நாடு­க­டத்­தப்­பட்­டி­ருந்­தனர். ஏப்ரல் 4 ஆம் திகதி நடிகர் ரயன் என்­டனி ஜெரம் வென்­ரூ­லியன் , மொஹம்மட் வசீம்தீன் மொஹம்மட் குதுப்தீன்,திமுத்து சுரங்க பெரேரா,சுராஜ் காவிந்த சில்வா ,சரித் பத்மன் ஆகி­யோரும் ஏப்ரல் – 8 ஆம் திகதி மொஹம்மட் நசீம் மொஹம்மட் பைசர், மொஹம்மட் முபார் மொஹம்மட் ஜபீர் ஆகி­யோரும் நாடு கடத்­தப்­பட்­டனர். ஏப்ரல் – 17 ஆம் திகதி மொஹம்மட் ரிஷான் மொஹம்மட் பதி­யுதீன்,மாவத்தே தான் புத்­திம பெரேரா சென­வி­ரத்ன , மொஹம்மட் இப்ரி மொஹம்மட் ஜபிர் ,ரண­சிங்க சுரேஷ் வசந்த எனப்­படும் வேலு­பிள்ளை ராகவன் சுரேஷ் வசந்த ,ஜொன் மெரிஞ்ஞ சைமன் ஹெவகே ரூப­தாச நிலான் ரொமேஷ் சம­ர­சிங்க ஆகி­யோரும் நாடு கடத்­தப்­பட்­டனர்.

ஏப்ரல் – 18 புப்யல் புஷ்­ப­கு­மார ,மொஹம்மட் அப்­ரிடி மொஹம்மட் இன்ஹாம் ஆகி­யோரும் ஏப்ரல் – 23 மொஹம்மட் பௌஸி எனப்­படும் மொஹம்மட் அசீம், ரணுத்கே ரதீபால் சமிந்த ,அமல் பெரேரா அகை­யோ­ருடன் மேலும் மூவரும் இறு­தி­யாக ஏப்ரல்- 24 அபு­பக்கர் மொஹம்மட் பதி­யு­தீனும் நாடு கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் இருந்து நாடு கடத்­தப்­படும் பாதாள உல­கக்­குழு தலைவர் மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்­டோரை பாது­காப்புப் பிரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­துக்கு விசேட குழு­வொன்று பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்தக் குழுவில் அரச புல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் 25 அதி­கா­ரிகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தன்ர். குறித்த குழு 24 மணித்தியாலங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் இவ்வாறு நாடு கடத்தப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கவென சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான ஷானி அபேசேகர, சமிந்த தனபால, பொலிஸ் அத்தியட்சர்களான ருவன் குனசேகர, நிசாந்த டி சொய்ஸா மற்றும் ஹேமந்த ஆகியோரை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட விஷேட மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அவர்களின் மேற்பார்வையில் கீழேயே தற்போது மதூஷிடம் சிரப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

இதனைவிட ஜனாதிபதி கொலை சதி விவகாரம் தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் தீப்பற்றியதில் 41 பேர் பலி

Next Post

மட்டக்களப்பு, அம்பாறையில் இடியுடன் கூடிய மழை?

Next Post

மட்டக்களப்பு, அம்பாறையில் இடியுடன் கூடிய மழை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

Recent News

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு…! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

July 2, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

இளையராஜா 134 படங்களின் பாடல்களுக்கும் உரிமை கோர முடியாது – உயர்நீதிமன்றம்

July 2, 2026
ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures