சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் தெற்கில் 6 கிலோகிராம் கேரளாக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்றும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவ
டிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

