பேரூந்து சாரதிகள் பற்றாக்குறையினால் 1000ரொறொன்ரோ பாடசாலை மாணவர்கள் அவதி!

பேரூந்து சாரதிகள் பற்றாக்குறையினால் 1000ரொறொன்ரோ பாடசாலை மாணவர்கள் அவதி!

கனடா.ரொறொன்ரோ-எதிர்பாராத ஒரு பேரூந்து சாரதிகள் பற்றாக்குறையினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலைக்கு தாமதமாக அல்லது பாடசாலை செல்லாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை நகரம் முழுவதிலும் கிட்டத்தட்ட 60பாதைகளை பாதித்துள்ளது என ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளது. தாமதம் காரணமாக மாவட்ட கல்வி சபை மற்றும் நகரின் கத்தோலிக்க பாடசாலை சபை இரண்டினதும் தொடக்க பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனைகள் பேரூந்து சேவைகளை வழங்கும் மூன்று நிறுவனங்களின் மத்தியில் பிரதான மையமாக விளங்குகின்றது என இரு கல்விச்சபையும் தெரிவிக்கின்றன.
தாங்கள் முடிந்த அளவில் அதிக அளவு பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டுசெல்ல முயல்வதாக இரு பகுதியினரும் கூறுகின்றனர். மேலதிக பேரூந்துகள் வாடகை வண்டிகள்—இதை விட சில அதிபர்கள் கார்களில் சென்று உதவுகின்றனர்.
இந்நிலை ஏற்றுக்கொள்ள கூடியதொன்றல்ல என ரொறொன்ரோ பாடசாலை சபை பேச்சாளர் றயன் பேர்ட தெரிவித்தார்.நிலைமையை சீர் செய்ய முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அடுத்த வாரத்தில் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதரிபார்க்;கப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News