Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம் | இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கு பெரும் சதி என்கிறார் சி.வி

December 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதையே ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தொடர்ச்சியாக தலையீடு செய்துவரும் இந்தியாவை அவ்விடயத்திலிருந்து முழுமையாக களைவதற்கு பெரும் சதிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பகிர்வு விடயங்களை மையப்படுத்தி ஒரு வருடங்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கு தற்போதைய பாராளுமன்றத்துக்கு ஆணையில்லை என்றும் புதிய பாராளுமன்றத்தில் ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு மற்றும், அதிகாரப்பகிர்வு விடயங்கள் கையாளப்படப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது. அதுபாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட விடயமாகும். அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான தடைகளும் காணப்படவில்லை.

ஆனாலும் அந்த விடயங்களை கையாள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரில்லாதவராக காணப்படுகின்றார். இதற்கான காரணம் எமக்குப் புரியவில்லை. அதேநேரம், புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலக்காகக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அதுமட்மன்றி, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான வகிபாகத்தினைக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்தியா, இலங்கை ஒப்பந்தம் அதற்கான ஒரு சான்றாக அமைகின்றது.

இந்நிலையில், அரசாங்கம், புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவிடயங்களை வழங்குவதாக கூறி, இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கே சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படு வதாகவே நாம் கருதுகின்றோம்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் புதிய அரசியலமைப்பு பற்றிபேசுகின்றார். ஏற்கனவே அவர் பிரதமராக இருந்த தருணத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு, இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் எந்த முன்னெடுப்புக்களுமின்றி அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவதற்கு பதிலாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைச்சாத்தியமாக்குவது தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரப்பகிர்வு தொடர்பிலான விடயங்களை படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

அதனைத் தவிர்த்து காலங்கடத்திச் செல்லும், செயற்பாடுகளுக்கும், இந்தியாவை புறந்தள்ளுவதற்கு முயற்சிக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க முடியாது என்றார்.

Previous Post

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து என்கிறார் அம்பிகா சற்குணநாதன்

Next Post

எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விசேட அவதானம் | எதிர்க்கட்சி தலைவரிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்

Next Post
அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குக : சஜித்

எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விசேட அவதானம் | எதிர்க்கட்சி தலைவரிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures