கோழிக்கோடு மலபார் கிறிஸ்டியன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வசிஷ்ட், ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதிய கவிதை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபாவின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலுடன் சேர்த்து மொத்தம் 14 கவிதைகள் அடங்கிய ‘தி லாஸ்ட் பெனால்டி கிக்’ என்ற தொகுப்பை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், போர்ச்சுகீஸ் மற்றும் சீன மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.