Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : ஆரவ், அருள்நிதி, ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், விடிவி கணேஷ், காளி வெங்கட், அருள் தாஸ் மற்றும் பலர்.

இயக்கம் : கணேஷ் விநாயகன்

மதிப்பீடு : 2/ 5

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அருள்வான்’ திரைப்படம்-  பார்வையாளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில், காடர் எனும் மொழி பேசும் ஒரு பிரிவினர் வசித்து வருகிறார்கள்.

இதில் கந்தன்-  அமரவள்ளி தம்பதிகள், குறிஞ்சி எனும் தங்களின் ஒரே பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அமரவள்ளியின் தந்தை மூப்பன்.. ஊர் தலைவராக இருக்கும் காலகட்டத்தில், அவருடைய கல்லாமையை பயன்படுத்தி அங்குள்ள மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த  வனத்துறை அதிகாரி முயற்சிக்கிறார்.

அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வேதனை அடைந்த மூப்பன் – கல்வி அறிவு இல்லாததால் தன் சமூக மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டோமே! என்று தன் பேத்தியான குறிஞ்சியிடம், ‘என்ன இடர் வந்தாலும் கல்வியை கற்று எம் சமூகத்தை முன்னேற்று’ என்று வாக்குறுதி பெற்று மரணம் அடைகிறார்.

கல்வி கற்பதற்கான வழிமுறை தெரியாமல் குறிஞ்சி தடுமாற.. அருகில் இருக்கும் பாடசாலை ஆசிரியர் ஒருவர், ‘இதற்காக நீ மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினால்.. நீ மட்டுமல்ல உங்கள் பகுதிக்கு அரசாங்க அனுசரணையுடன் கூடிய பாடசாலை திறக்கப்படும்.

அதன் மூலமாக அனைவருக்கும் கல்வி கிடைக்கும்’ என்றும் சொல்ல.. இதனை தன்னுடைய லட்சியமாக உறுதியேற்கிறார் குறிஞ்சி. இதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மலையில் இருந்து கீழிறங்கி மாவட்ட ஆட்சி வரை சந்திக்க பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? தோல்வி அடைந்ததா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

2004 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழும் மலையாளமும் கலந்து பேசும் காடர் இன மக்களின் மொழி உச்சரிப்பு- கலாச்சாரம்- சடங்கு- சம்பிரதாயங்கள் – ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டிருப்பது… ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆனால் குறிஞ்சி எனும் அடிப்படை வசதிகளும் நாகரீகமும் இல்லாத மலைவாழ் பகுதியில் வாழும் சிறுமியின் கல்விக் கனவு நிறைவேறுவதற்கு.. அவள் மேற்கொள்ளும் முயற்சிகளும்.. அதற்காக சமூகத்தில் நிகழும் தடைகளும் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறது.

இதன் முத்தாய்ப்பாக குறிஞ்சி கதாபாத்திரம் மனிதர்களையும் விலங்குகளையும் ஒப்பிட்டு பேசுவது போன்ற ஒரு உரையாடல் … பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.  

மலைவாழ் மக்களுக்கு கல்வி கிடைக்காததன் நடைமுறை காரணத்தை இயக்குநர் விவரித்திருந்தாலும்… அதற்காக மாவட்ட ஆட்சியரே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மலைவாழ் மக்களின் கல்விக்காக ஆசிரியராக பணியாற்றுகிறார் என சொல்வது ஒரு பிரிவினருக்கு மிகை கற்பனையாக தோன்றுகிறது. இருப்பினும் இதனையும் ரசிக்கலாம்.

Primary & Secondary Schooling (K-12)

மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் இளமையாகவும்,  முதுமையாகவும் நடித்திருக்கும் அருள்நிதி – அவருக்கே உரிய அளவான மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.  

கந்தன் எனும் மலைவாழ் இளைஞனாக நடித்திருக்கும் நடிகர் ஆரவ்வின் திரை தோற்றம்- திரை பங்களிப்பு நிறைவு.

அமரவல்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா பாண்டியனின் நடிப்பும் சிறப்பு.

தன்ராஜ் எனும் பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் காளி வெங்கட்டும்.. திரைக்கதையின் சுவாரசியத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

குறிஞ்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி கிருத்திகாவின் நடிப்பு வியக்க வைக்கிறது. ஒட்டுமொத்த கதையையும் தன் ஒற்றைத் தோளில் சுமக்கிறார். அதற்காக அர்ப்பணிப்புடன் திரையில் உழைத்திருக்கிறார்.

டாக்கு ஃபீச்சர் ஃபிலிம் ஆக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்கள்.

மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கான அதிலும் பெண் பிள்ளைக்கான கல்வி  விடயம் என்பதால்…. பல உரையாடல்களில் பிரச்சார நெடி அதிகம்.

அருள்வான் – எட்டா ஏட்டு கல்விக்கான தூதர்

Previous Post

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026

Recent News

நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது – அருட்தந்தை மா.சத்திவேல்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures