ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் சமரா ஸ்டேடியம் அறிமுகமாகிறது. 2014 ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது பிரமாண்டமாய் தயாராகி தயார் நிலையில் நிற்கிறது. இந்தப் பகுதியில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் அதிகம் நடைபெறுவதை கவுரவிக்கும் வகையில், ஸ்டேடியத்தின் வடிவமைப்பு ‘விண்வெளி’யை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மிகப் பெரிய கண்ணாடிக் கூண்டு போன்ற தோற்றத்தில் பிரமிக்க வைக்கும் சமரா அரங்கின் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 45,000.