Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

December 19, 2018
in News, Politics, World
0

இலங்கையில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ், முஸ்லிம் மக்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தச் செவ்வி வருமாறு,

கேள்வி – தற்போது பாராளுமன்றை ஜனாதிபதி கலைத்தமை அரசியல் யாப்பிற்கு விரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமையின் அடிப்படையில் ஜனாதிபதி தவறு இழைத்தமை உறுதி செய்யப்படுகின்றது. எனவே ஜனாதிபதிக்கு எதிராக அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா?

பதில் – ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். அவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஜனாதிபதி அரசியல் யாப்பினை வேண்டுமென்றே அல்லது தெரிந்தே மீறினார் என்பதன் அடிப்படையிலேயே கொண்டு வர முடியும். இங்கே தற்போது ஜனாதிபதி அரசியல் யாப்பினை மீறினாரா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு அப்பால் மிகத் தெளிவாக யாப்பிற்கு எதிராகச் செயல்பட்டார் என உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்கொணர்ந்தால் அதன்போது அரசியல் யாப்பை மீறினாரா இல்லையா என்ற வாதமே அவசியம் இல்லாது போய்விடும்.
கேள்வி – இந்த வழக்கில் நீங்கள் காட்டிய அக்கறையினை தமிழ் மக்களின் அவசிய விடயங்களான நில விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம், திணைக்களங்களின் நில அபகிரிப்புக்களில் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றதே அது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில் – தமிழ் மக்களின் நில விடுவிப்புக்கள் தொடர்பில் 2003ஆம் ஆண்டு முதல் முதல் பல வழக்குகளை நடாத்தியுள்ளோம். அதேபோல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கிலும் பங்குகொண்டோம். அதேபோல் எமது மக்களிற்கு பாதிப்பான திவுனகம வழக்கிலும் பங்கு கொண்டோம். இதில் நாம் வெற்றியீட்டியதனாலேயே எமக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய அன்றைய உயர்நீதிமன்ற முதன்மை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு நடந்தது இந்த நாடு மட்டுமல்ல உலகமே அறியும்.
கேள்வி – இந்தத் தீர்ப்பானது சிங்கள தேசத்திற்கும் சிங்கள மக்களிற்கும் நன்மை பயக்கும் அதேநேரம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை கிட்டாது, ஏனெனில் எந்த சிங்களத் தலைவர் ஆண்டாலும் தமிழர்களின் நிலை இதுதான் எனக் கூறப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில் – சிங்கள மக்கள் மட்டுமே நன்மை அடைவர் என்பது தவறான எண்ணம். ஏனெனில் இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும்போதெல்லாம் பாதிப்படைவது சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது சிறுபான்மையினரே! அதனாலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இந்த நாடு முழுவதற்குமான ஜனநாயகத்தை நிலைநாட்டியதில் எமது மக்களிற்கும் பாரிய பங்குண்டு என்பதனை யாரும் மறுக்க முடியாது

Previous Post

ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு அமைச்சு இல்லை

Next Post

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு த.தே.கூ. எதிர்ப்பு!

Next Post

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு த.தே.கூ. எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

June 21, 2026
தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures