வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களமிறங்கும் உலக லெவன் அணியில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக சக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு, கரீபிய மண்ணில் ஏற்பட்ட புயலால் சீரழிந்த மைதானங்களை சரிசெய்ய நிதி திரட்டும் வகையில், வரும் 31ல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கண்காட்சி ‘டுவென்டி–20’ போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஐ.சி.சி., உலக லெவன் அணிகள் மோதுகின்றன.
உலக லெவன் அணியில் இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாண்ட்யா, இப்போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து இவருக்கு பதிலாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, 12வது வீரராக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக லெவன் அணியில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து சார்பில் தலா 2 வீரர்களும், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் சார்பில் தலா ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.